மேலூர் அருகே பழமையான மரம் வெட்டி கடத்தல்

மேலூர், டிச.21:  மேலூர் அருகே பழமையான மரத்தை வெட்டி கடத்தியவர்களை மக்கள் மடக்கி பிடித்து வனத்துறை மற்றும் வருவாய் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். மேலூர் அருகே பூஞ்சுத்தி கிராமத்தில் இருந்து 300 ஆண்டுகள் பழமையான வாகை மரம் இருந்தது. இந்த மரத்தை சிலர் வெட்டி லாரியில் ஏற்றி எடை போடுவதற்காக மேலூர் செக்போஸ்ட் அருகில் உள்ள எடை மேடைக்கு நேற்று வந்தனர். சூழலியல் ஆர்வலர் ரவிச்சந்திரன் தலைமையில் வந்தவர்கள் அந்த லாரியை சிறை பிடித்தனர். குடிமை பொருள் வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட லாரியில் மரம் ஏற்றியது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் முறையான பதில் இல்லை. இதையடுத்து அவர்கள் இது குறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம் தாங்கள் மரம் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் வைத்துள்ளதாக தெரிவித்தனர். வருவாய்துறை மற்றும் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>