×

வெய்க்காலிப்பட்டி பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கடையம், செப். 14: ஆழ்வார்குறிச்சியில் இயங்கும் இந்திய குழந்தைகள் மன்றம் மற்றும் பெங்களூருவை சேர்ந்த ஏஎஸ்கேஆர் மென்பொருள் நிறுவனம் சார்பில் கடையம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஹென்றி ராஜ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய குழந்தைகள் மன்றத்தின் இயக்குநர் பாப்பு கலந்துகொண்டு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 4ம் இடம், மாவட்ட அளவில் பள்ளியில் முதலிடம் பிடித்த நாகஜோதி, 2ம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த பவுலின் ஜாய்ஸ் மற்றும் ஜெஸ்லின் ஆகியோருக்கு ரொக்கப் பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

தன்னார்வலர் பத்மா மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு வீரவநல்லூர்,செப்.14:கோபாலசமுத்திரம் கிராம உதயம் அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன் தலைமை வகித்தார். நிர்வாக மேலாளர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் ஆறுமுகத்தாய் வரவேற்றார். தலைமை கணக்காளர் சுமிதா, மையத்தலைவர்கள் அதிசயமணி, சரோஜா, வேலம்மாள், ராஜகனி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிளாஸ்டிக் பையை தவிர்க்கும் விதமாக மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். பகுதி பொறுப்பாளர் அருணா நன்றி கூறினார்.

Tags : Veikalipatti School ,Kadayam ,Veikalipatti St. Joseph's High School ,Indian Children's Foundation ,Alwarkurichi ,ASKR Software Company ,Bangalore… ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...