×

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சீனாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஹாக்கி ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியனான ஜப்பான் அணியுடன் மோதியது. இப்போட்டியின் 7வது நிமிஷத்தில் இந்திய வீராங்கனை பியூட்டி டங் டங் கோல் அடித்தார்.

இதையடுத்து 2ம் பாதியில் ஜப்பான் வீராங்கனை 58வது நிமிஷத்தில் ஷிகோ கோபயக்வா கோல் அடித்து ஆட்டத்தை சமன்செய்தார். இதன் மூலம் நடப்பு சாம்பியனான ஜப்பான் அணியை இறுதிப் போட்டிக்கு முன்னேற விடாமல் இந்திய அணி தடுத்தது.

இந்திய அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் சீனா – தென் கொரியா மோதுகின்றன. இந்தப் போட்டியில் சீனா டிரா செய்தாலோ அல்லது வெற்றி பெற்றாலோ இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

Tags : Asian Cup Women's Hockey Series ,Japan ,Women's Hockey Asian Cup Super 4 ,China ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...