கடல் சீற்றம்: கன்னியாகுமரியில் படகுசேவை ரத்து

கன்னியாகுமரி, டிச. 21: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிடும் ஆர்வமுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக டிக்கெட் கவுன்டரில் காலை முதலே காத்திருந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு சேவை  நேற்று முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Related Stories:

>