×

படந்தாலுமூடு சோதனை சாவடியில் லாரியில் ஏற்றி வந்த 30 டன் அரிசி சிக்கியது: அதிகாரிகள் தீவிர விசாரணை

களியக்காவிளை,டிச.21: களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனை சாவடியில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆந்திர பதிவெண் கொண்ட டாரஸ் லாரி ஒன்று கேரளா நோக்கி வந்து ெகாண்டு இருந்தது. அந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டதில், 50 கிலோ மூடைகளாக சுமார் 30 டன் அரிசி இருந்தது . இதையடுத்து இந்த அரிசியை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என போலீசார் டிரைவர், கிளீனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியததையடுத்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக  ரேஷன் அரிசியை கழுவி சுத்தம் செய்து 50 கிலோ மூடைகளில் சாதாரண அரிசி போல மாற்றி விற்பனை செய்யும் வழக்கம்  அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த அரிசியும் ரேஷன் அரிசியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்த லாரி குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள லாரியை நாகர்கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

Tags : Pathanamthitta ,investigation ,
× RELATED என்னுடைய மகன் தோற்கப்போவது உறுதி: ஏ.கே. அந்தோணி பேட்டி