சென்னை: நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தனியார் நிலங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிபதி குழு உத்தரவை ஏற்க மறுத்த நீதிபதிகள், யானைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மின்வேலிகள் அமைக்காமல், விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
