×

தஞ்சாவூரில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சாவூர், செப்.13: தஞ்சாவூரில் இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக்கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Tags : Thanjavur ,People's Grievance Day ,District Collector ,Priyanka Pankajam ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...