×

உடுமலையில் நலத்திட்ட உதவி

உடுமலை,  டிச. 21: உடுமலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று  முன்தினம் நடைபெற்றது. 254 பயனாளிகளுக்கு ரூ.59.54 லட்சம் மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில்,  அமைச்சர்  ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
விழாவில் 6 பேருக்கு விலையில்லா தையல்  இயந்திரம், 109 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 58 பேருக்கு விதவை  உதவித்தொகை, 18 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, 7 பேருக்கு  கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, 2 பேருக்கு முதிர்கன்னி உதவித்தொகை,   49 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா, ஆதி திராவிடர் நலத்துறையின்  சார்பில் 11 பேருக்இ விலையில்லா வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து,  பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2020-21ம் கல்வியாண்டுக்கு 15,002 மாணவ  மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்வை அமைச்சர் ராதாகிருஷ்ணன்  தொடங்கிவைத்தார். விழாவில் 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்  வழங்கினார்.மேலும் உடுமலை மாணவி உமாநந்தினி தேவாரத்தில் உள்ள 8239  பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதை பாராட்டி, அமைச்சர்  தனது நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட  வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன்,  கோட்டாட்சியர் ரங்கநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், சமூக பாதுகாப்பு  திட்ட தனி துணை ஆட்சியர் வாசுகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்,  உடுமலை மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, வட்டாட்சியர் ஜெய்சிங்சிவகுமார்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : Udumalai ,
× RELATED இலவச தடகள பயிற்சி முகாம்