சிக்னல்கள் இயங்காததால் பல்லடம் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி

திருப்பூர், டிச. 21: திருப்பூர், பல்லடம் ரோடு, சந்தை பேட்டை எதிரில் உள்ள சிக்னல் இயங்காததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. திருப்பூரின் முக்கிய ரோடுகளில் ஒன்றாக உள்ளது பல்லடம் ரோடு. இந்த ரோட்டின் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இந்தநிலையில் பல்லடம் ரோடு சந்தை பேட்டை பகுதியில் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் அந்த சிக்னலை சரி செய்யாமல் உள்ளனர். இதனால் அந்த பகுதியில் தினசரி காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் மாநகர பகுதிகளில் இயங்காமல் இருக்கும் சிக்னல்களை சீரமைத்து வாகன போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>