பழநி: பழநி பூங்கா ரோடு பகுதியில் கோயிலுடன் இணைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது அந்த நிலத்திற்கு பழநி கோயில் இணை ஆணையரை, தக்காராக நியமனம் செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் நேற்று தண்டபாணி மடத்தின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அறநிலையத்துறையின் இந்நடவடிக்கை பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
