×

வேலை கேட்க சென்ற நர்ஸ் மாயம்

கடலூர், செப். 13: கடலூர் அருகே சின்ன காரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் நர்சிங் முடித்துள்ளார். சம்பவத்தன்று தனியார் மருத்துவமனையில் வேலை கேட்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து நர்சை தேடி வருகின்றனர்.

Tags : Cuddalore ,Sakthivel ,Chinna Karaikadu ,
× RELATED ஓய்வூதியர் தின விழா