×

சமுதாய பெயரை தாரை வார்க்க எதிர்ப்பு வேளாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை, டிச.21: சமுதாய பெயரை தாரைவார்க்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அனைத்து வேளாளர்கள் சங்கத்தினர் நேற்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நான்கு திசை வேளாளர்கள் சங்க தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘’தமிழகத்தில் செட்டியார், முதலியார் முதல் பிள்ளைமார் வரை ’வேளாளர்’ என்ற சாதிப்பெயரை அடைமொழியாக  வைத்திருந்தனர். இட ஒதுக்கீடு வரும்போது, சாதியின் பெயரை மையமாக வைத்துக் கொள்கின்றனர்.

தற்போது, எமது சாதியின் பெயரை மாற்ற முயற்சித்து வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசு, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு ‘வேளாளர் பெயரை மாற்றிக் கொடுப்போம்’ என சொல்கின்றனர். ஜாதியை வேறொரு சமுதாயத்திற்கு தாரை வார்க்க முயற்சி செய்து வருகிறது. இதனை கைவிட வேண்டும். எனவே, எங்கள் ஜாதி பெயரை காப்பாற்றும் விதமாக இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும்’’. என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு திசைகள் சங்க செயலாளர் கார்வேந்தன், பொருளாளர் மகேஸ்வரன், காப்பாளர் சிவதேசிகன் பிள்ளை, மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை தலைவர் ராஜேந்திரன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,associations ,
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...