குடும்ப பிரச்னையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு குழந்தையுடன் தாய் தற்கொலை முயற்சி: ஆண்டிபட்டி அருகே பரபரப்பு

ஆண்டிபட்டி, டிச. 18: ஆண்டிபட்டி அருகே, குடும்ப பிரச்னையில் குழந்தைக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், அதே ஊரைச் சேர்ந்த

மாரியம்மாள் (25), என்பவரை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 5 வயதில் ஓரு ஆண் குழந்தையும், பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், மாரியம்மாள் கோபித்து கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றார். குடும்ப பிரச்னையால் மனவேதனையில் இருந்த மாரியம்மாள் நேற்று தனது பெண் குழந்தைக்கு தூக்க மாத்திரையை கொடுத்துவிட்டு தானும் குடித்தார்.

இருவரும் மயங்கிக் கிடந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>