×

ரூ.68 லட்சத்தில் புதிய தார்ச்சாலை

வருசநாடு, டிச. 18: மயிலாடும்பாறை அருகே, பாறைக்குளம் முதல் சிறப்பாறை வரை தார்ச்சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் புகார் அளித்தனர். இது தொடர்பாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக  மயிலாடும்பாறை அருகே பாறைக்குளம் முதல் சிறப்பாறை வரை ரூ.68 லட்சத்தில்  புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இப்பணியை மயிலாடும்பாறை யூனியன் பொறியாளர் ராஜகோபால், தொழில்நுட்ப உதவியாளர்கள் அழகுராஜா, பிரகாஷ், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Tags : Darshala ,
× RELATED ₹72 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை பணி