×

திருச்சியில் விட்டு விட்டு சாரல் மழை துறையூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டம்

துறையூர், டிச.18: துறையூர் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துறையூர் வட்டார தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் மகேந்திரன், பொருளாளர் தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தங்கள் கோரிக்கைகளான சாலை பணியாளர்களை பழிவாங்கும் வகையில் மன உளைச்சலை ஏற்படுத்தும் உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர், சாலை ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7வது ஊதிய மாற்ற அரசாணையின்படி சாலை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீட்டு வாடகைப்படி வழங்காமல் பொருளாதார இழப்பு வரும் போக்கை கண்டிப்பது, சாலைப் பணியாளர்கள் சாலை பராமரிப்பு பணியை மேற்கொள்ள மண்வெட்டி, பிக்காக்ஸ், கை அரிவாள் உள்ளிட்ட கருவி தளவாடங்கள், காலணி, மழை கோட்டு மற்றும் உபகரணங்கள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாநில மாவட்ட தலைவர் விவேகானந்தன், மாவட்ட இணைச் செயலாளர் மணிமாறன், ஜீவானந்தம், ராஜேந்திரன், இளங்கோவன், முத்துக்குமார் உட்பட 70க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Road workers ,union protests ,Thuraiyur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல்...