மயான பாதையில் தனி நபர் ஆக்கிரமிப்பு சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்

தொட்டியம், டிச.18: தொட்டியத்தில் அரங்கூர் செல்லும் சாலையில் மயானத்திற்கு செல்லும் பாதையில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொட்டியம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ரத்தனாம்பாள்(80), உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது தனிநபர் ஒருவர் மயானத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்ததுடன் இப்பகுதியில் அடக்கம் செய்யக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரத்தனாம்பாள் உறவினர்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தொட்டியம் எஸ்ஐ., குமார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>