தொட்டியத்தில் பரபரப்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

திருச்சி, டிச. 18: திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் எம்ப்ளாய்ஸ் யூனியன் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இதில் பிஎஸ்என்எல் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. உண்ணாவிரதத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம்பாட்ஷா தலைமை வகித்தார். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>