×

ரிக்‌ஷாகாரரை தாக்கிய ரவுடி கைது

திருச்சி, செப்.12: ரிக்‌ஷாகாரரை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல்(55). ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளியான, இவர் தனது மனைவியுடன் உறவினரை சந்திக்க ராமமூர்த்தி நகருக்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த நபர், தங்கவேலு மற்றும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கினார்.

இதில் தங்கவேலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து சங்கிலிண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ஏழுமலை(31) என்ற ரவுடியை கைது செய்தனர்.

 

Tags : Trichy ,Thangavel ,Sangiliyandapuram ,Palakkarai, Trichy ,Ramamurthy Nagar ,
× RELATED ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்