- அரசு கல்லூரி
- சத்தியபாமா பல்கலைக்கழகம்
- கரூர்
- சென்னை
- வேதியியல் துறை
- அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- பந்துதகாரன்புதூர்
- Manmangalam
- டாக்டர்
- சசிபிரபா
- சென்னை…
கரூர், செப். 12: மண்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பில் சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. முன்னதாக சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக புதுமை இயக்குனர் டாக்டர் சசிபிரபா வரவேற்றார்.
அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நடேசன் சிறப்புரை ஆற்றினார். சத்தியபாமா பல்கலைக்கழக டாக்டர் தினேஷ்குமார், ஆராய்ச்சி மையத்தின் கண்ணோட்டத்தை பற்றி விரிவாககூறினார். இதில் கரூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் சாந்தி, உதவி பேராசிரியர் செவ்வந்தி, உமா மகேஷ்வரி மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
