×

சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் தொடர்மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிவகங்கை, டிச. 18: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை நேற்று பகல் முழுவதும் பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபர் பிற்பகுதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நவம்பர் மாத தொடக்கத்தில் சில நாட்கள் மழை பெய்த நிலையில் பின்னர் மழை முற்றிலும் நின்று பனி பெய்ய துவங்கியது. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் புயலால் மழை பெய்தது.

மழை நின்று மீண்டும் பனி பெய்ய துவங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை நேற்று பகல் முழுவதும் பெய்தது. சில இடங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அதிகபட்சமாக தேவகோட்டையில் 34.4 மி.மீ மழை பெய்தது. காரைக்குடியில் 33.4 மி.மீ, காளையார்கோவிலில் 30.6 மி.மீ, திருப்புத்தூரில் 19.6 மி.மீ, சிவகங்கையில் 19.2 மி.மீ, மானாமதுரையில் 19 மி.மீ, இளையான்குடியில் 16.2 மி.மீ, திருப்புவனத்தில் 14.4 மி.மீ, சிங்கம்புணரியில் 11. 6மி.மீ மழை பெய்தது. இந்த தொடர் மழையால் பெரும்பாலான குளங்கள், கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பகல் முழுவதும் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.

Tags : Sivagangai district ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்