×

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை 30ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 30.8.2025 வரை வழங்கப்பட்டது. தற்பொழுது மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 30.9.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா ஷூ, விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும். இது தொடர்பாக 9499055642, 9499055618 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Director of ,Employment ,and Training ,Department ,Employment and Training Department ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்