×

ஆசியாவிலேயே 2வதாக மிகப்பெரியது கோவில்பத்து உணவு தானிய சேமிப்பு கிடங்கை விரைவில் திறக்க வேண்டும்

திருவாரூர், டிச.18: ஆசியாவிலேயே 2 வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து உணவு தானிய சேமிப்பு கிடங்கை விரைவில் திறக்க வேண்டும் என டிஎன்சிஎஸ்சி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அதன் மாநில பொதுச்செயலாளர் இளவரி வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் பிரதான தொழிலாக விளங்கும் விவசாயத்தில் குறுவை மற்றும் சம்பா, தாளடி பருவங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவற்றை பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்த பெரிய அளவிலான கிடங்கு வசதிகள் இல்லாமல் பெரும்பாலான நெல் மூட்டைகள் திறந்த வெளி சேமிப்பு கிடங்கிலேயே சேமிக்கப்படும் போது இயற்கை சீற்றங்களால் வீணாகின்றன . இதை கருத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து பாதுகாக்கும் வகையில் நாகை மாவட்டம் கோவில்பத்து கிராமத்தில் நபார்டு வங்கி நிதியுதவியுடன் சுமார் ரூ150 கோடி மதிப்பீட்டில் 175 ஏக்கர் பரப்பளவில் சேமிப்பு கிடங்கு கட்ட திட்டமிடப்பட்டு கோவில்பத்து ஊராட்சிக்கு சொந்தமான மீன்பாசி நிலம் ஒதுக்கப்பட்டது. இது ஆசியாசிலேயே 2 வது மிகப்பெரிய உணவு தாணிய சேமிப்பு கிடங்கு.

அதாவது 25 கோடி கிலோ அளவில் சேமிக்கும் வசதியுடைய ஒரு சேமிப்புக்கிடங்கும். தலா 50 லட்சம் கிலோ கொள்ளவில் 15 சேமிப்புக் கிடங்குகளும் என மொத்தம் சுமார் ஒரு இலட்சம் மெடன் கொள்ளவு திறன் கொண்ட சேமிப்பு கிடங்குகளாகும். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் போது இந்த கிடங்கு முற்றிலும் உருகுலைந்து சின்னபின்னமானது. தற்போது மறு சீரமைப்பு செய்து மீண்டும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் அச்சுருத்தி வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கோவில்பத்து சேமிப்பு கிடங்கை விரைவில் திறக்க ஆவண செய்யுமாறு தமிழக முதல்வர் மற்றும் உணவுத்துறை அமைச்சரை டி.என்.சி.எஸ்.சி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு இளவரி தெரிவித்துள்ளார்.

Tags : Asia ,
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...