×

டிஎன்சிஎஸ்சி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை கட்டிமேடு ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு காணொளி பயிற்சி

திருத்துறைப்பூண்டி, டிச.18: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் தமிழக குழந்தை நேய கிராம ஊராட்சிகளை உருவாக்குதல் தொடர்பான இணைய வழி பயிற்சி மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டது. இந்தியாவில் யுனிசெப் நிறுவனத்தின் கொள்கை குழந்தைகள் நலம் உரிமைகள் கிராம ஊராட்சிகளின் மற்றும் சமுதாய அமைப்புகளின் கடமைகள் குழந்தை நலனுக்கான சட்டத் திட்டங்கள் நெறிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. முனைவர் அற்புதராஜ் வரவேற்றார். முனைவர் மனோகராசிங் குழந்தை நேய கிராம ஊராட்சியை உருவாக்குதல் பற்றி ஊரக வளர்ச்சி (பயிற்சி) கூடுதல் தலைமை செயலர் மற்றும் தலைவர் மீனாட்சி ராஜகோபால் ஆலோசனை வழங்கினார். டெல்லி யுனிசெப் சமுதாய கொள்கை தலைவர் மிசாக்கி அக்கா சகஉடேயு யுனிசெப் இந்தியாவின் பங்கு குறித்து பேசினார்.தொடர்ந்து காந்தி கிராமிய பல்கலைக் கழக பேராசிரியர் பழனித்துரை, தெலங்கான ஊராட்சி நிறுவன தலைவர் கதிரேசன், பட்டீஸ்வரம் ஊராட்சி தலைவி வெற்றிச்செல்வி, முனைவர் பீட்டர் ராஜும், மூத்த ஆலோசகர் ராமசுப்ரமணியன், சமூக பாதுகாப்பு இணை இயக்குனர் தனசேகரன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் இணையவழி பயிற்சி அளித்தனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன், துணைத் தலைவர் பாக்கியராஜ், ஊராட்சி செயலர் புவனேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kattimedu Panchayath ,
× RELATED மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்