×

பணி பாதியில் நிறுத்தம் நீரிழிவு நோயை தடுக்கும் மாப்பிள்ளை சம்பா சித்த மருத்துவத்தின் மூலப்பொருள் கருங்குறுவை

திருத்துறைப்பூண்டி, டிச.18: இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்த நாட்டில் தற்போது 200க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை பழமை விரும்பிகள் மீட்டுள்ளனர். அந்தவகையில் திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் பொன்முடி என்பவரது வயலில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விதைக்கப்பட்டுள்ள 34 வகையான நெல் ரகங்களும் அவற்றின் பயன்பாடுகளும், தன்மைகளும் குறித்து விளக்கப்பட்டது. இதனை திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சக்கரபாணி நடத்தினார். இதில் பெண் தொழிலாளர்களுக்கு பயிரிடப்பட்டுள்ள ரகங்கள் குறித்து ஒவ்வொன்றாக தனித்தனியாக விளக்கமளித்தார். பூங்கார் நெல் ரகம் அனைத்து நிலப் பகுதியிலும் விளையக்கூடியது, 70 முதல் 90 நாள் அறுவடைக்கு தயாராக கூடியது, சிவப்பு அரிசி உடையது தாய்ப்பால் சுரப்பு, ஆரோக்கியமான குழந்தை பேரு, நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கக்கூடிய நல்லடக்கம், குழியடிச்சான் என்ற நெல் ரகம் 110 நாள் அறுவடைக்கு வரக்கூடியது. இது 4 அடி உயரம் வளரக்கூடும் இந்த ரகம் இயற்கை சீற்றத்தை தாங்கி நிற்கக் கூடியது. விதைத்து ஒரு முறை மழை பெய்தாலும் தண்ணீர் வைத்தாலோ போதுமானது.

இது கருப்பு மேற்பகுதியை கொண்டு இருக்கக் கூடியது. இந்த நெல்லின் உடைய அரிசியானது நாம் தினந்தோறும் பயன்படுத்தும் போது சிறுநீரகம் மூளை பகுதி தோல் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை சரியாக செயல்பட வைக்கிறது. சீரக சம்பா நமது பகுதியில் மக்களால் பெரிதும் விரும்பி கூடிய ஒரு பாரம்பரிய நெல் ரகம். 130 நாட்கள் அறுவடைக்கு வரக்கூடியது. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இது பசியை தூண்டக்கூடியது. ஆரம்பகால வாத நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. இதில் பிரியாணி செய்தால் சுவையாக இருக்கும். கிச்சலி சம்பா 140 நாட்களை அறுவடைக்கு தயாராக கூடியது வெள்ளை நிற அரிசி நாலரை அடி உயரம் வளரக்கூடியது. உடல் பலம் பெற வைக்கக்கூடியது இதனுடைய வைக்கோல் கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதோடு பால் சுரக்கவும் செய்கிறது. இது பல காலங்களுக்கு ஏற்ற ரகம். தூயமல்லி இது 140 நாட்கள் அறுவடைக்கு வரக்கூடியது. மன்னர்களுடைய அரிசி என்ற புகழைப் பெற்றது. இதனுடைய அரிசி மட்டுமல்லாமல் தவிடும் சத்துமிக்கது. இதனுடைய நீராகாரம் இளநீர் போன்று மிகவும் சுவையாக இருக்கக்கூடியது.

தங்கச் சம்பா 135 நாட்களில் அறுவடைக்கு தயாராக கூடியது. சிவப்பு அரிசி இதனுடைய நெல் மேல் பகுதியானது தங்க நிறத்தில் ஜொலிக்க கூடியது. இது உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஒரு நெல் ரகம் கருப்பு கவுனி சுமார் நூற்றி அறுபது நாட்கள் அறுவடைக்கு வரக்கூடியது. ஆண்மை சக்தியை மேம்படுத்தக்கூடிய ஒரு நெல் ரகம். வாடன் சம்பா 160 நாள் இதனுடைய உயரம் 4 அடி வளரக்கூடியது இது மஞ்சள்காமாலை நோயை கட்டுப்படுத்தக் கூடியது. தமிழகத்தின் சில பகுதிகளில் இது பிறந்த குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறு கூட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள். சொர்ணமசூரி இந்த நெல் ரகம் 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. இது பித்தம் வாயு போன்ற நோய்களை தீர்க்க கூடியதாக இருக்கிறது. கல்லுண்டை இந்த நெல் ரகம் 110 முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. இதனை படைவீரர்கள் என்று கூறுவார்களாம். கருடன் சம்பா 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.


ரத்தசோகை சிறுநீர் தொற்று உடல் கட்டிகள் போன்றவற்றை குணமாக்கக் கூடியது. சுமார் நான்கடி முதல் நாலரை அடி வரை வளரக் கூடிய தன்மையுடையது. மாப்பிள்ளை சம்பா 160 முதல் 180 நாட்களில் வரக்கூடிய இது புரதம் நார்ச்சத்து உப்பு சத்து இரும்புச் சத்து துத்தநாகச் சத்து மிகுந்தது. ஆண்மை குறைபாடு, நீரிழிவு நோய் நீக்கக்கூடியது. சுறுசுறுப்பை தரக்கூடியது கொழுப்பைக் குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. அறுபதாம் குறுவை இது 60 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. இதனை ஐந்து போகும்வரை சாகுபடி செய்கிறார்கள்.

கொத்தமல்லி சம்பா வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும் 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. நான்கடி வளரக்கூடியது. இட்லி தோசை புட்டு இவற்றிற்கு சிறந்த ஒரு அரிசி ரகம். நவரா சிறு குழந்தைகளுக்கான சளியை போக்க கூடிய ஒரு ரகம் லேகியம் சூரணம் தயாரிக்க இந்த உலகத்தையே பயன்படுத்துகிறார்கள். 130 நாட்களில் அறுவடைக்கு தயாராக கூடியது. கருங்குருவை சித்த மருத்துவத்தில் முக்கியமான மூலப்பொருள். இந்த கருங்குருவை 110 நாளில் அறுவடைக்கு வரக்கூடியது. நெல் கருப்பு நிறமாகவும் அரிசி சிவப்பு நிறமாகவும் இருக்கும். இது யானைக்கால் நோயை கட்டுப்படுத்தக் கூடியது.

குஷ்டம் மற்றும் விஷக்கடி போகக் கூடியதாக இருக்கிறது. இதனுடைய சிறப்பு ஒரு ஆண்டுகள் வயலில் கிடந்தாலும் மக்காத தன்மை உடையது. காட்டுயானம் சுமார் 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் ரகத்தில் யானை நின்றால் வெளியில் தெரியாத அளவிற்கு எட்டடி வரை வளரக்கூடிய தன்மையுடையது. இது சர்க்கரை நோய் புற்று நோய் போன்றவற்றை குணப்படுத்த கூடிய ஒரு ரகமாக உள்ளது. மேலும் வயலில் விதிக்கப்பட்டுள்ள சின்னார். வெள்ளை பொன்னி .துளசி வாசனை. சீரக சம்பா. வாசனை சீரக சம்பா. உள்ளிட்ட ரகங்கள் விளக்கப்பட்டது இவ்வயலில் இயற்கை உரமான பஞ்சகாவ்யா மற்றும் மீன் அமிலம் ஆகியவை மட்டுமே தெளிக்கப்பட்டு உள்ளது என்றார்.

Tags : Groom ,
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...