×

சங்கரன்கோவில் வருஷாபிஷேக விழாவில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா திரளானோர் தரிசனம்

சங்கரன்கோவில், செப். 12: சங்கரன்கோவில் சங் கர நாராயண சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிசேக விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை 7 மணி முதல் 11 மணி வரை மங்கள இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், 2ம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, சித்திவிநாயகர், சங்கர லிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்பாள், சண்முகர் வருஷாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு 7 மணிக்கு சித்தி விநாயகர், பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மன், வள்ளி தெய்வானை சமேத சண்முகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ரத வீதிகள் வழியாக வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சங்கரன்கோவில் டிஎஸ்பி செங்குட்டு வேலவன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags : Sankarankovil ,Narayana Swamy ,Temple ,
× RELATED ஓய்வூதியர் தின விழா