×

திருவோணம் பகுதியில் 500 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி வயல்களில் மழைநீர் தேக்கம்

ஒரத்தநாடு, டிச. 18: ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஒன்றிய பகுதியில் 500 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் முளைப்புத்திறன் பாதிக்கும் அபாயத்தில் விவசாயிகள் உள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த காடுவெட்டிவிடுதி, சிவவிடுதி, நெய்வேலி தென்பாதி, நெய்வேலி வடபாதி, சென்னியவிடுதி, வெங்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் மின்மோட்டார் தண்ணீரை கொண்டு நிலக்கடலை விதைத்த நிலையில் சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான நிலக்கடலை பயிர்கள் அழுகியும், முளைப்புத்திறன் இல்லாமலும் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் விவசாயிகளுக்கு அனைத்து வீணாகும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. நிலக்கடலை விவசாயிகள், வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்த பயிர்கள் நாசமாக வாய்ப்புள்ளது. எனவே நிலக்கடலை சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டுமென திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Rainwater harvesting ,groundnut cultivation fields ,area ,Thiruvonam ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி