×

கலெக்டர் எச்சரிக்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் திட்டத்தினை பயன்படுத்த வேண்டுகோள்

புதுக்கோட்டை, டிச.18: புதுகை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது: தமிழக அரசு விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி, அவர்களை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்தினை மேம்படச் செய்வதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இடைநிலை மூலதனத்துடன் உதவித்தொகையானது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடங்கிய உடன் நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதனத்துடன் உதவித் தொகை வழங்கப்படும். இந்த தொகை மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைபொருட்களை லாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழக அரசே வழங்கும். சலுகையுடன் கூடிய சுழல் நிதியானது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவதுபோல் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தினை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் வகையில் தமிழக அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண்மை துணை இயக்குநர், வேளாண் வணிகம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த சேவையினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர தெரிவித்துள்ளார்.

Tags : farmer producer companies ,
× RELATED நிதியளிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற...