×

இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் அணையாமல் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: இமானுவேல் சேகரனாரின் புகழ்ச்சுடர் அணையாமல் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இமானுவேல் சேகரனார் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது;

தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய ஒடுக்குதல் போன்ற சமூகச் சழக்குகளுக்கு எதிராக வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள்!

அவர் வாழ்ந்தது 32 ஆண்டுகளே… ஆனால் அவர் மறைந்தாலும் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூகநீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது.

அத்தீரமிகு தியாகியின் நினைவைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Emanuel Sekaran ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Emanuel Sekaranar ,K. ,Stalin ,Method ,
× RELATED இருதய இடையீட்டு...