×

சத்திரக்குடி வட்டார கரும்பு விவசாயிகள் பட்டறிவு பயணம்

பரமக்குடி, டிச. 18:  ராமநாதபுரம் மாவட்டத்தில்  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2020- 21 திட்டத்தின் கீழ், நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகள் பட்டறிவு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சத்திரக்குடி வட்டார வேளாண்மை துறை சார்பாக மஞ்சக்கொல்லை, கூறைகுளம், எட்டிவயல் கிராமங்களில் இருந்து 50 விவசாயிகள், தேனியில் உள்ள ராஜ் கரும்பு ஆலைக்கு அழைத்து  செல்லப்பட்டனர்.

அங்கு பூச்சி மேலாண்மை உர நிர்வாகம், அறுவடை தொழில்நுட்பம்,  கரும்பு வயல்வெளி பயிற்சி, நீர் மேலாண்மை உள்பட பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து முதன்மை நிர்வாகி பாலசுப்பிரமணியன் எடுத்துரைத்தார். தொழில்நுட்ப மேலாளர் இளையராஜா விவசாயிகளுக்கு கருத்துரை வழங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் மெய்விழி நன்றி கூறினார்.

Tags : Chattrakudi Regional Sugarcane Farmers Workshop Journey ,
× RELATED ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை...