×

ஐயப்பன் கோயில்களில் மார்கழி பூஜை

சாயல்குடி, டிச. 18:  கடலாடி சபரிதோட்டத்தில் ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு மார்கழி மாத சிறப்பு பூஜை குருநாதர் கருப்பையா தலைமையிலும், சற்குரு மகேந்திரன் முன்னிலையிலும் நடந்தது. ஐயப்பனுக்கு பொங்கலிட்டும், பழங்களை படைத்தும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கன்னி பூஜை, படி பூஜை நடந்தது. இதுபோல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் குருநாதர் நாகராஜன் தலைமையில் ஐயப்பனுக்கு நெய், பால், இளநீர் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

முதுகுளத்தூர் சுப்பிரமணியர் கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் குருநாதர் முத்துராமலிங்கம் முன்னிலையில் நடந்தது. பத்திரகாளியம்மன் கோயில் ஐயப்பனுக்கு குருநாதர் திருமால் தலைமையில் பூஜைகள் நடந்தது. இதேபோல் சாயல்குடி ஐயப்பன் கோயில், சிக்கல் தர்மசாஸ்தா கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடந்தன.

Tags : Markazhi Puja ,temples ,
× RELATED தாழவேடு, ராமஞ்சேரியில் உள்ள ஸ்ரீ...