×

கடலோர கிராமங்களில் கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க வேண்டும்

காரைக்கால்,டிச.18: காரைக்காலில் கடலோர கிராமங்களில் கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, காசாகுடிமேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமங்கள் உள்ளன. கடலோரத்தில் அமைந்துள்ள இந்த கிராமங்களில் தற்போது கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு அதிகரித்து வருகிறது. காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு உள்ளிட்ட கிராமங்களில் கடல் அரிப்பு அதிகமாகி கிராமங்களில் கடல்நீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பைபர் படகுகளை கட்டி வைக்க இடமின்றி கடல் நீர் முன்னேறி வந்து கொண்டுள்ளது. ஒவ்வொரு புயல் மற்றும் கடல் சீற்றத்தின் போதும் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. கடலோரத்தில் கற்கள் கொட்டி மீனவ கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக கடலோரத்தில் கற்கள் கொட்டி கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : villages ,sea erosion ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை