செந்தில்பாலாஜி பேட்டி பெரியகஞ்சமனூர் பகுதியில் தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் கரூர்- வெங்கமேடு சாலையில் தடுப்புசுவரை உயரமாக அமைக்க கோரிக்கை

கரூர், டிச. 18: கரூர் பகுதியில் இருந்து வாங்கப்பாளையம், அரசு காலனி, வாங்கல், மண்மங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கமேடு பகுதியாக செல்கிறது. மேலும், சர்ச் கார்னர் வெங்கமேடு இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், மேம்பால பகுதியை தாண்டியதும் மிகவும் சிறிய அளவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஒரு பகுதியில் செல்லும்போது, மற்றவர்கள் இதை எளிதாக தாண்டி மறுபக்கம் செல்ல முற்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன்னர் சென்டர் மீடியன் தடுப்புசுவரை உயரமாக அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர், டிச.18: கரூர் அடுத்துள்ள பெரியகஞ்சமனூர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் திருச்சி பைபாஸ் சாலையில் இருந்து தரகம்பட்டி செல்லும் வழியில் பெரியகஞ்சமனூர் பகுதி உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதேபோல், இந்த பகுதியிலும் அதிகளவு மழை பெய்த காரணத்தினால் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள தண்ணீர் கொசுக்களின் உற்பத்திக்கும் வழிவகுக்கும் என்பதால் இதனை அகற்ற தேவையான ஏற்பாடுகளையோ, அல்லது கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: