×

ஆளில்லா வீட்டின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் நகை, பணம் திருட்டு

பெரம்பலூர், செப்.11: எளம்பலூர் கிராமத்தில் ஆளில்லா வீட்டில் பூட்டை உடைத்து ரூ 90 ஆயிரம் மதிப்பில் நகை-பணம் திருடு போனது. பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் கிராமம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி சுதா (32), வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்போது புதிதாக கட்டியுள்ள வீட்டிற்குசென்று இரவு தங்கியுள்ளார்.

பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்த பார்த்த சுதா தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3/4 பவுன் தோடு, வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கைரேகை நிபுனர்களுடன் சென்று திருடிச்செற மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags : Perambalur ,Elambalur ,Kumar ,Sudha ,Vadakku Street, Elambalur village ,
× RELATED ஓய்வூதியர் தின விழா