×

பேரூர் உடையாபட்டியில் அம்மா மினி கிளினிக் திறப்பு

தோகைமலை, டிச.18: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலம் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சந்திரசேகர், தோகைமலை தமிழ்சங்க நிறுவனர் காந்திராஜன், வட்டார மருத்துவ அலுவலர் (பொ) மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக குளித்தலை எம்எல்ஏ ராமர், தோகைமலை ஒன்றிய பெருந்தலைவர் லதா ரெங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மினி கிளினிக்கை குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தனர்.

புதிதாக திறக்கப்பட்ட முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர் மற்றும் ஒரு செவிலியரை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதில் காலை 8 மணிமுதல் 12 மணி வரையும் பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் சிகிச்சை பெறலாம் என்று சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவகுமார், கழுகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய துணை பெருந்தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, ஒன்றிய ஆனையர் ராஜேந்திரன், துணை தலைவர் வசந்தா தனராஜ், சமூக ஆர்வலர்கள் பொன்னம்பலம், நடராஜ், மந்தாநாயக்கர், செந்தில்குமார், அண்ணாதுரை, வேலுச்சாமி, கோபால், கந்தவேல், சரவணன், முத்துவேல், பாதிரியார் லூயிஸ்பிரிட்டோ, தமிழ் சங்கத்தின் செயலாளர் குணசேகரன், ஊராட்சி செயலர் போதுமணி உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Amma Mini Clinic ,Perur Udayapatti ,
× RELATED அம்மா மினி கிளினிக் மூலம் சென்னையில் 28 ஆயிரம் பேருக்கு சிகிச்சை