×

திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதியில் அம்மா மினி கிளினிக் திறப்பு

மதுரை, டிச.18:  திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய பகுதியில் உள்ள பாறைபத்தி, சாக்கிலிபட்டி ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. மதுரை கிழக்கு அதிமுக மாவட்டச்செயலாளரும், எம்எல்ஏ.வுமான வி.வி.ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், “திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 11 இடங்களில் அம்மா கிளினிக் செயல்படவுள்ளது. சாக்கிலிப்பட்டி  கிராமத்தில்  உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்வதென்றால் 5 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். ஆனால் இப்போது உங்கள் இருப்பிடத்திற்கு மருத்துவமனை வந்துள்ளது.

காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும். சர்க்கரை நோய், ரத்த அழுத்த பரிசோதனை, காய்ச்சல், சளி, குழந்தைகளுக்கான பொது சிகிச்சை அளிக்கப்பட உள்ளது” என்றார்.விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசீப், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பங்குன்றம் ஒன்றியச்செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணைச்செயலாளர் முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சந்திரன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கருத்தக்கண்ணன், பகுதி கழக துணைச் செயலாளர் செல்வக்குமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Opening ,Amma Mini Clinic ,Thiruparankundram Union Territory ,
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு