தேவாரம் பகுதியில் தேய்ந்த மா விவசாயம் கண்டுகொள்ளாத தோட்டகலைத்துறை

தேவாரம், டிச. 18: தேவாரம் பகுதியில் குறைந்து வரும் மா விவசாயத்தை ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை, கண்டுகொள்ளாமல் உள்ளது.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி பகுதியில் மா விவசாயம் அதிகம் நடக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் ஆகிய ஊர்களின் மலையடிவார நிலங்களில் ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் மா விவசாயம் நடந்து வந்தது. இப்பகுதியில் விளைந்த மாங்காய், மாம்பழம் சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், மா விவசாயம் அடியோடு குறைந்துவிட்டது. மா விவசாய நிலங்களை ஊக்குவிக்க தோட்டகலைத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. உத்தமபாளையம் வட்டாரத்தில் மா விவசாயம் எவ்வளவு ஏக்கரில் உள்ளது. கடந்த கால நிலவரம், தற்போது எவ்வளவு குறைந்துள்ளது என கணக்கெடுப்பதில்லை. இதேபோல் மா விவசாயத்திற்கு வரும் மானியங்கள் குறித்தும் விவசாயிகளிடம் கூறுவது இல்லை.

தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பீல்டு விசிட்டுக்கு வராமல் உள்ளதால், எந்த பயிர்களை பயிரிடுவது என தெரியாமல் போய் விடுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தேவாரம் பகுதியில் மா சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் இல்லை’ என்றனர்.

Related Stories: