×

பருவமழை கைகொடுத்ததால் வைகை கரையில் நெல் சாகுபடி தீவிரம்

ஆண்டிபட்டி, டிச. 18: பருவமழை கைகொடுத்ததால், வைகை ஆற்றின் கரையோர கிராமங்களில் நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை கரையையொட்டி டி.அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, புள்ளிமான்கோம்பை, தர்மத்துபட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறி சாகுபடி அதிகளவில் நடைபெறும்.

இந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்ததால் டி.அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், தொடர் மழையால் பல்வேறு ஓடைகளில் நீர்வரத்து உள்ளதாலும், நெல் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர் மழையால் கடந்த மாதம் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்கள் செழிப்புடன் வளர்ந்து வருகிறது. மேலும் அறுவடை வரையில் போதுமான தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘இந்த ஆண்டு பெய்த மழை காரணமாக நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பயிரிடப்பட்டுள்ள நெல் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறுவடை செய்யப்படும். கடந்த 3 ஆண்டுகளாக தேனி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் ஒருபோகமாக ஆண்டுதோறும் நெல்சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Tags : banks ,Vaigai ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...