பட்டிவீரன்பட்டி அருகே அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

பட்டிவீரன்பட்டி, டிச. 18:  பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டியில் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் இளைஞர், இளம்பெண் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நகர செயலாளர் மாசாணம் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், மோகன் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ தேன்மோழி  புதிய உறுப்பினர் சேர்க்கையினை துவக்கி வைத்தார். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பெற்று கொண்டனர். இதில் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சதீஷ்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் தம்பிராஜா, துணை செயலாளர் ஜான், பேரூர் இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>