×

சுற்றுலா பயணிகளை கவரும் எமரால்டு அணை.

ஊட்டி, டிச. 18: ஊட்டியில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையோரத்தில் எமரால்டு அணையின் இயற்கை அழகு தற்போது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.  ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு மட்டும் செல்வது மட்டுமின்றி, இயற்கை அழகை காணவும் செல்கின்றனர். குறிப்பாக, கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஊட்டி அருகேயுள்ள அவலாஞ்சி அணையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இது ேபான்ற சூழல் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் போது, அதன் வழித்தடங்களில் உள்ள இயற்கை அழகை பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக, ஊட்டியில் இருந்து அவலாஞ்சி செல்லும் சாலையோரத்தில் இத்தலார் முதல் எமரால்டு வரை செல்லும் சாலைேயாரங்களில் அழகாக காட்சியளிக்கும் எமரால்டு அணையின் அழகு சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கிறது. பச்சை மலைகளுக்கு இடையே நீல நிறத்தில் காட்சியளிக்கும் தண்ணீர் மற்றும், அணையின் நடுவே தீவுகள் போன்று காட்சியளிக்கும் வனங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனை தொலைவில் இருந்து சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Tags : Emerald Dam ,
× RELATED நீலகிரி மாவட்டம் எமரால்டு அணை கரை பகுதியில் 2 புலிகள் உயிரிழப்பு