ரூ.25 லட்சம் குட்கா பொருட்களுடன் கார், வேன் பறிமுதல்: கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்

உத்திரமேரூர், டிச.18: உத்திரமேரூர் அருகே ₹25 லட்சம் குட்கா பொருட்களுடன் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்தனர்.

உத்திரமேரூர் - மேல்மருவத்தூர் சாலை எல்.எண்டத்தூர் கிராமத்தில் சந்தை மேட்டுப் பகுதி வழியாக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்துவதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, குட்கா பொருட்களை மினி வேனில் இருந்து காரில் ஏற்றுவதை கண்டுபிடித்தனர். உடனே போலீசார், கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை சுற்றி வளைத்தனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற எல்.எண்டத்தூரை சேர்ந்த தேவாராம் (27), உத்திரமேரூர் தீபாராம் (24) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார், குட்கா பொருட்களுடன் வாகனங்களை பறிமுதல் செய்து, 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர்களிடம், எங்கிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது. எந்தெந்த பகுதிகளில், யார் யாருக்கு சப்ளை செய்யப்பட இருந்தது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

>