×

சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

கோவை, டிச. 18: கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கார்த்திக், கோவை மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனு: கோவை சிங்காநல்லூர் 64-வது வார்டு உழவர் சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55 ஏக்கர் பரப்பளவில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட   960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இவை, குறுகிய காலத்திற்குள்ளாகவே சிதிலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. இதனால், இங்கு குடியிருப்பவர்கள், எங்கு செல்வது என தெரியாமல் தவிக்கிறார்கள். இவை, சீரமைக்கப்படும் என துணை முதல்வர் அறிவித்து ஓராண்டு நிறைவடைந்தும் இதுவரையிலும் ஒரு சிறு  கல்கூட நகர்த்தப்படவில்லை. தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக, இந்த வீடுகள், மிகவும் ஆபத்தான நிலையில்  உள்ளன.  எனவே, இங்குள்ள மக்களின் பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். காலதாமதமின்றி அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும். அதுவரை, இங்குள்ள மக்களுக்கு அதே பகுதியில் மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Tags : Singanallur ,
× RELATED மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு