×

தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் சேதம் அடைந்த தெருவின் பெயர் பலகை

தஞ்சாவூர், செப்.10: தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் சேதம் அடந்த இடங்களில் மீண்டும் பெயர் பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாநகராட்சி பகுதியில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி தெருக்களின் பெயர் பலகை சாலையோரம் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் எதிரே தெருவின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

தற்போது, அங்கு பெயர் பலகை இல்லாமல் கம்பிகள் மட்டுமே உள்ளது. இதனால் தெருவின் பெயர் தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அந்த பகுதியில் மீண்டும் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Manambuchavadi ,Thanjavur ,Thanjavur Corporation ,
× RELATED சங்கரன்கோவிலில் அன்பழகன் பிறந்தநாள் விழா