×

தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் பயனடையலாம்

மதுரை, செப். 10: தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 2025 மாதத்திற்கு 13.09.2025 மற்றும் 14.09.2025 ஆகிய தேதிகளில் 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

மேலும், இனிவரும் மாதங்களிலும் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்படி திட்டப்பயனாளிகளுக்கு அவரவர் இல்லங்களுக்கே நேரில் வந்து குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

 

Tags : Chief Minister ,Madurai ,Madurai Regional Cooperative Societies ,
× RELATED ஓய்வூதியர் தின விழா