×

புதுக்கோட்டை வட்டாரத்தில் கம்பு பயிரில் வெட்டுப்புழு தாக்குதல்

புதுக்கோட்டை:   புதுக்கோட்டை வட்டாரத்தில், உமரிக்கோட்டை, செட்டியூரணி, கல்லம்பரம்பு, வரதராஜபுரம், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் கம்பு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரி விவசாயத்தை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் குறைவான மழைப்பொழிவு இருந்ததால் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் விதைக்க வேண்டிய பயிர்கள் காலதாமதமாக நவம்பர் மாதத்தில் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் புரெவி புயலின் காரணமாக மானாவாரி பகுதிகளில் தொடர்மழை பெய்ததால் பிந்தைய விதைப்பு செய்த கம்பு பயிர்களில் வெட்டுப்புழு தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. இதையடுத்து  வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா தலைமையில் வேளாண்மை உதவி இயக்குநர் தரக்கட்டுப்பாடு கண்ணன், உதவி வேளாண்மை அலுவலர்கள  மணிகண்டன், செல்வி ஆகியோர் கம்பு சாகுபடி செய்த பகுதிகளில் வயலில் ஆய்வு  மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் வெட்டுப்புழு தாக்குதல் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்ட வயல்களில் எமாமெக்டின் பெனர்சோயேட் என்ற பூச்சிக்கொல்லி மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்து பகுதி நன்கு நனையும்படி தெளிக்க விவசாயிகளுக்கு பரிந்துரை செய்தனர். மேலும் கம்பு பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி 18.01.2021. எனவே விவசாயிகள் உடனடியாக ஏக்கருக்கு ரூ. 99 செலுத்தி பயிர்காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Tags : Insect attack ,area ,Pudukkottai ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...