×

விளாத்திகுளம் அருகே நடமாடும் ரேஷன் கடை சின்னப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

விளாத்திகுளம்:  விளாத்திகுளம் அருகே இலந்தைகுளத்தில் நடமாடும் ரேஷன் கடையை சின்னப்பன் எம்எல்ஏ  தொடங்கி வைத்தார். விளாத்திகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட இலந்தைகுளம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நடமாடும் ரேஷன் கடையை சின்னப்பன் எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். ஒவ்வொரு மாதம் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், விளாத்திகுளம்  யூனியன் சேர்மன் முனியசக்தி ராமசந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு பால்ராஜ், மேற்கு நடராஜன்,
ஜெ. பேரவை செயலாளர் சுபாசந்திரபோஸ் உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


Tags : Chinnappan MLA ,ration shop ,Vilathikulam ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா