×

காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எஸ்பி ஆல்பர்ட்ஜான் அறிவுரை

தூத்துக்குடி, செப். 10: காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எஸ்பி ஆல்பர்ட்ஜான் போலீசாருக்கு அறிவுரை கூறினார். தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் குளத்தூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். மேலும் காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். ஆய்வின் போது விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags : SP ,Albert John ,Thoothukudi ,Kulathur police station ,
× RELATED ஓய்வூதியர் தின விழா