×

விளாத்திகுளம், சாத்தான்குளத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம், டிச.18:  விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், போனஸ் நாள் கணக்கில் அறிவிக்க வேண்டும், ஜமாபந்தி படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகராஜ் தலைமை வகித்தார். வட்ட தலைவர் குப்புராஜ் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் சாலமோன், பொருளாளர் சண்முகராமநாதன், நிலஅளவையர் சங்கம் வெங்கடேஷ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற சங்க தலைவர் சுப்பையா, நிர்வாகி முனியசாமி உட்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு  தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று  மாலை  ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க வட்ட தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். வட்டசெயலாளர் ரவிக்குமார், பொருளாளர் வள்ளிசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் சுதர்சன், வட்டச்செயலாளர் ராஜேஷ்குமார், வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்ட தலைவர் சுராஜ் ஆகியோர் போராட்டத்தை ஆதரித்து பேசினர். இதில்  சங்க நிர்வாகிகள் ஜான்சிராணி ஆறுமுகத்தாய், இசக்கி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராம வருவாய் உதவியாளர் சங்க துணைச் செயலாளர் டேவிட்சிங்கம் நன்றி கூறினார்.

Tags : Revenue village workers ,Vilathikulam ,Sathankulam ,
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...