×

பேரணாம்பட்டில் தொழிலாளியை குத்தி கொன்ற வாலிபர் போலீசில் சரண்

வேலூர்: பேரணாம்பட்டில் தந்தையிடம் தகராறு செய்த கூலித்ெதாழிலாளியை குத்திக்கொன்ற வாலிபர் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ஒருவரது துக்க நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அலெக்ஸ்(26), சக்திவேல் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையறிந்த சக்திவேல் மகன் அப்பு(18), எதிரே வந்த அலெக்ைஸ தடுத்து நிறுத்தி ‘என் அப்பாவிடமே பிரச்னை செய்கிறாயா? எனக்கூறி தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், படுகாயமடைந்த அலெக்சை அப்பகுதி மக்கள் மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையறிந்த அவரது உறவினர்கள், அப்புவை கைது செய்யக்கோரி மருத்துவமனை வளாகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்புவை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான அப்புவை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அப்பு, குடியாத்தம் காந்திநகரில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு சரணடைந்தார். இதையடுத்து டிஎஸ்பி தரன் மற்றும் போலீசார் அப்புவை கே.வி.குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முதல் வாக்காளர்கள், 5 நாளான...