×

அறுவை சிகிச்சையின்றி நோயாளியின் உடைந்த எலும்பு ஒட்டவைப்பு: அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

அருப்புக்கோட்டை, டிச. 17: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை புளியம்பட்டிபகுதியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை(34). கட்டிடத்தொழிலாளியான இவர் 10 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் அவரது வலது தோள்பட்டை மற்றும் மூட்டுப்பகுதி எலும்புகள் உடைந்தன.உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவனையில் அய்யாத்துரை சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை சரியில்லாததால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்  2 நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார்.

அவருக்கு நேற்று காலை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி வடிவேல் ஆலோசனையின் பேரில், எலும்பு சிறப்பு மருத்துவர்கள் அருணாசலம், சோமமூர்த்தி நாகராஜன் ஆகியோர் சிஏஆர்எம் என்ற நவீன கருவிமூலம் அய்யாத்துரைக்கு நொறுங்கிப்போன மூட்டு எலும்புகளை அறுவை சிகிச்சையின்றி ரத்தம் வீணாகாமல் ஒருமணி நேரத்தில் ஒட்ட வைத்தனர். நவீன முறையில் சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு மருத்துவமனையில் டாக்டர்கள் சந்திரமெளலி, அண்ணாத்துரை, மகேஸ்வரன், காமாட்சி பாண்டியன், வெங்கடேஸ்வரன் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Tags : patient ,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...