×

அருப்புக்கோட்டை நகராட்சி பொது மயானத்தில் அனுமதியின்றி கட்டப்படும் சமாதிகளால் பிரச்னை புதைக்க இடமில்லையென புலம்பும் பொதுமக்கள்

அருப்புக்கோட்டை, டிச. 17: அருப்புக்கோட்டை நகராட்சி பொதுமயானம் சொக்கலிங்கபுரம் நேதாஜிரோட்டில் உள்ளது. இங்கு தனித்தனியாக தகன மேடைகள் உள்ளன. புதைப்பதற்கு தனியாக இடம் உள்ளது.  நவீன எரிவாயுதகனமேடையும் உள்ளது.ஒரு குறிப்பிட்ட பெரும்பாலான சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் இறந்தவர்களின் உடலை அவர்களது வழக்கப்படி புதைத்து வருகின்றனர்.அத்துடன் இறந்தவர்களுக்கு சமாதி கட்டுவதால் இடநெருக்கடி ஏற்பட்டு புதைக்க இடம் இல்லாமல் பலர் தவித்து வகின்றனர்.

மேலும் இருக்கின்ற இடத்தில் புதைக்க தோண்டினால் ஏற்கனவே புதைத்தவர்களின் உடல் எலும்புக்கூடாகவருகிறது. இதனால் அச்சப்படுகின்றனர். இறந்தவர்களின் உடலை புதைத்த  இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது என  2004ம் ஆண்டு நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என முன்னாள் கவுன்சிலர்கள் கூறுகின்றனர். ஆனால், நகராட்சியினர் மயானத்தை முறையாக பராமரிக்காததால் 50க்கும் மேற்பட்டவர்கள் சொந்த இடம் போல் குறைந்த பட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து கிரானைட், மார்பில் போன்ற கற்களால்கட்டி அழகுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்தால் இறந்தவர்களை புதைக்க இடம் இல்லாமல் போய்விடும். தற்போது சிரமப்பட்டுத்தான் புதைத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எனவே, இறந்தவர்களை புதைத்த இடத்தில் சமாதி கட்டியதை இடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு  நோட்டீஸ் வழங்கவும், புதிய சமாதிகட்டக்கூடாது என்று நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர் சரவணன் கூறுகையில், இறந்தவர்களை புதைக்க மட்டும்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. சமாதி கட்ட அனுமதி இல்லை. இரவு நேரங்களில் புதைத்த இடத்தில் சமாதி கட்டி விடுகின்றனர். உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Tags : tombs ,Aruppukottai Municipal Public Cemetery ,
× RELATED திண்டுக்கல் அருகே பெருங்கற்கால கல்லறைகள் கண்டுபிடிப்பு